மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மேற்குவங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மண்டலங்களில் இணையதளம் மற்றும் பிராட்பேண்ட் தரத்தை மேம்படுத்த, இந்திய தேசிய இணையதள இணைப்பகம் துர்காபூர் மற்றும் பர்தமான் ஆகிய இடங்களில், இணையதள இணைப்பகங்களை அறிமுகப்படுத்துகிறது

Posted On: 09 JUL 2022 4:45PM by PIB Chennai

இந்தியர்கள் அனைவரையும், வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பிக்கையான, மற்றும் பொறுப்பான இணையதள சேவை மூலம் இணைப்பதென்ற பிரதமர் திரு.நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கேற்ப, பர்தமான்-துர்காபூர் மக்களவை உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.அலுவாலியா முன்னிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர், நிக்ஸி-யின் (NIXI)  இரண்டு புதிய இணையதள இணைப்பக மையங்களை (IXP) துர்காபூர் மற்றும் பர்தமான் ஆகிய இடங்களில் திறந்து வைக்க உள்ளார்.  இது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY)  1000 நாட்கள் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு முன்முயற்சி ஆகும்.  


மாநிலத்தின் முதலாவது இணையதள இணைப்பகம் கொல்கத்தாவில், இந்திய தேசிய இணையதள இணைப்பகத்தால் தொடங்கப்பட்டது.  தற்போது, துர்காபூர் மற்றும் பர்தமானில் புதிய இணையதள இணைப்பகங்கள் தொடங்கப்படுவதன் மூலம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்தப்படுகிறது.   இதன் தொடக்க விழா, துர்காபூர், சிட்டி சென்டரில் உள்ள தி சிட்டி ரெஸிடென்சியில் நடைபெற உள்ளது.  


இம்மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள 9 புதிய நிக்ஸி இணையதள இணைப்பகங்கள், உள்ளூர் அளவிலும், சுற்றுப்புற மண்டலங்களிலும் இணையதளம் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும்.   


மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் :  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840368

********


(Release ID: 1840394) Visitor Counter : 231


Read this release in: English , Urdu , Hindi , Bengali