மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

இந்தியா ஸ்டாக் அறிவு பரிமாற்றத்தின் 2-வது நாள்

Posted On: 09 JUL 2022 10:43AM by PIB Chennai

ஜூலை 4 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்று வரும் டிஜிட்டல் இந்தியா வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மூன்று நாட்கள் நடைபெறும் இந்தியா ஸ்டாக் அறிவு பரிமாற்ற' நிகழ்ச்சியில் நேற்று காணொலி வாயிலாக நான்கு அமர்வுகள் நடைபெற்றன.

சுகாதாரம் பற்றிய அமர்வில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஆர். எஸ். ஷர்மா, கோவின் பற்றியும், இரண்டு பில்லியன் கொவிட் தடுப்பூசி டோஸ்களை விநியோகம் செய்யும் வகையில் அதன் வளர்ச்சி குறித்தும் பேசினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற வேளாண் பற்றிய அமர்வில், உலகப் பொருளாதார மன்றத்தின் இந்தியாவின் நான்காவது தொழில் புரட்சிக்கான  மையத்தின் தலைமை ஆலோசகர் திரு ஜே. சத்யநாராயணா, விவசாயத்திற்கான இந்திய டிஜிட்டல் சூழலியல் என்ற தலைப்பில் முக்கிய உரை வழங்கினார். இந்தியாவில் விவசாயத்துறை சந்தித்து வரும் சவால்கள் பற்றியும், டிஜிட்டல் சூழலியல் அணுகுமுறை பற்றியும் விவரித்தார்.

திறன் குறித்து நடைபெற்ற அமர்வில், கர்மயோகி இயக்கம், அட்டல் டிங்கரிங் ஆய்வகம், டிஜிட்டல் எழுத்தறிவு, தொழில்நுட்பம் மூலம் திறன் கட்டமைப்பு போன்ற விஷயங்களில் நடுவர் குழுவினர் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இறுதியாக, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் இணைப்பில்லாதவர்களை இணைத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில், டிஜிட்டல் உள்ளடக்கத்துடன் சம்பந்தப்பட்ட சவால்கள் பற்றி விவாதிக்கப்பட்டதுடன், மைகவ் (MyGov), சி.எஸ்.சி, உமங், மற்றும் எம்சேவா (mSeva) போன்றவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட அமர்வுகளை https://www.youtube.com/DigitalIndiaofficial என்ற மின் முகவரியில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840287

•••••••••••••



(Release ID: 1840338) Visitor Counter : 149