சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் அண்மைச் செய்திகள்
Posted On:
09 JUL 2022 9:48AM by PIB Chennai
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 198.65 கொவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.
இந்தியாவில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,25,028. கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 0.29% ஆக உள்ளது.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.51%.
கடந்த 24 மணி நேரத்தில் 16,104 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,29,53,980 என அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 18,840 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 4.14% ஆகும்.
வாராந்திர பாதிப்பு விகிதம் 4.09% ஆகும்.
இதுவரை மொத்தம் 86.61 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 4,54,778 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840265
***************
(Release ID: 1840294)
Visitor Counter : 159