விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய சபை மற்றும் தேசிய பங்குச் சந்தையின் கூட்டு மாநாட்டை மத்திய விவசாயத்துறை அமைச்சர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 06 JUL 2022 4:12PM by PIB Chennai

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திரசிங் தோமர், சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய சபை மற்றும் தேசிய பங்குச் சந்தையின் கூட்டு கூட்டத்தை, குவாலியரில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு.தோமர், விவசாய சகோதார, சகோதரிகளின் கடின உழைப்பு மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்த அரசின் கொள்கைகள் காரணமாக, உலகில், அதிக விவசாய விளைபபொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் முதல் இரண்டு இடங்களில் இந்தியா உள்ளது என்றார். இந்தியாவின் இயற்கை வேளாண் பொருட்களுக்கு உலக அளவில் அதிகதேவை இருக்கிறது. கொரோனா காலத்திலும், இந்தியாவில் இருந்து 3.75 லட்சம் கோடி விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது நல்ல அறிகுறி. இந்நிலையில், நமது விவசாயப் பொருட்களின் தரத்தை நிலைநிறுத்தி, அது உலகத்தரத்தை எட்டுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

“விவசாய சந்தைகளை சரியாக பெறுதல்” என்ற மாநாடு, நாட்டின் முன்னணி பொருளாதார சிந்தனைக் குழுவில் ஒன்றான சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய சபை, உலகின் மிகப்பெரிய பங்குச் சந்தையான தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர் திரு.தோமர், பல்வேறு பருவநிலைகளையுடைய நாடு இந்தியா என்றும், இங்கு விவசாயம் செய்வதற்கு சாதகமான வானிலை உள்ளது என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1839593

***************


(रिलीज़ आईडी: 1839619) आगंतुक पटल : 288
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri