எரிசக்தி அமைச்சகம்
தேசிய அனல் மின் கழகம் நடப்பு நிதியாண்டின் (2022-23) முதல் காலாண்டில் 21.7 சதவீதத்திற்கும் அதிகமாக மின்உற்பத்தி செய்துள்ளது
प्रविष्टि तिथि:
04 JUL 2022 5:21PM by PIB Chennai
தேசிய அனல் மின் கழகம் நடப்பு நிதியாண்டின் (2022-23) முதல் காலாண்டில் 21.7 சதவீதத்திற்கும் அதிகமாக மின்உற்பத்தி செய்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் -2022 வரையிலான காலாண்டில் 104.4 பில்லியன் யூனிட் அளவிற்கு மின்உற்பத்தி செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 85.8 பில்லியன் யூனிட் அளவிற்கு மின் உற்பத்தி செய்திருந்தது.
கடந்த 2021ம் ஆண்டின் ஜூன் மாதத்தின் 26.9 பில்லியன் யூனிட் அளவிற்கு மின் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், கடந்த ஜூன் மாதம் 2022-ம் ஆண்டில் 34.8 பில்லியன் யூனிட் அளவிற்கு மின்உற்பத்தி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தின் மின்உற்பத்தியை விட, 29.3 சதவீதம் அதிகமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில் செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1839134
***************
(रिलीज़ आईडी: 1839181)
आगंतुक पटल : 210