கலாசாரத்துறை அமைச்சகம்
மஹுலி குழுமக் கோயில்களின் விரிவான மேம்பாடு குறித்த அறிக்கையை கலாச்சார அமைச்சகத்திடம் தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையம் சமர்ப்பிக்கவுள்ளது
Posted On:
03 JUL 2022 6:50PM by PIB Chennai
மஹுலி குழுமக் கோயில்களின் விரிவான மேம்பாடு குறித்த அறிக்கையை கலாச்சார அமைச்சகத்திடம் தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையம் சமர்ப்பிக்கவுள்ளது. புகழ்பெற்ற இந்தக்கோயில்களின் குழு - தக்ஷின் காசி என்று அழைக்கப்படுகிறது. இது 11 மற்றும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹேமட்பந்தி கட்டிடக்கலை பாணியில் சதாராவுக்கு அருகில் கட்டப்பட்டுள்ளதாகும்.
தேசிய நினைவுச்சின்ன ஆணையத்தின் தலைவர் திரு தருண் விஜய், மராட்டிய மகாராணிகளான ராணி தாராபாய் போஸ்லே மற்றும் ராணி யேஷோ பாய் போஸ்லே ஆகியோரின் சமாதிகளை மஹுலியில் (சதாரா) பார்வையிடச் சென்றார். அவருடன் மூத்த அதிகாரிகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களும் வந்திருந்தனர்.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு மகாராணி தாராபாயின் பங்களிப்புடன் முகலாயர்களை முறியடிக்க அவர் மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைகளும் மகத்தானது என்றும், வரும் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் அவரது நினைவு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து மிகப்பெரிய அளவில் நடவடிக்கை எடுத்தால் இதைச் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பேன் என்றார் தருண் விஜய்.
ராம்டெக் கோயில் குழு, அம்பாலா கேட், சிந்தூரி பவ்லி, மன்சார் புத்த ஸ்தூபி ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார். மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டியிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பிப்ப உள்ளதாகவும், கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ராம்டெக் மற்றும் மஹுலி கோயில்களை மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் பட்டியலில் சேர்த்து மகாராணி தாராபாய் மற்றும் யேசுபாய் சமாதிகள் தகுந்த முறையில் வளர்ச்சியடைய உதவவும் பரிந்துரை செய்வதாகவும் அவர் கூறினார்.
***************
(Release ID: 1838991)
Visitor Counter : 201