புவி அறிவியல் அமைச்சகம்

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 2030ம் ஆண்டுக்குள் குறைந்தது 30% அளவிலான நிலம், நீர், கடல் பகுதிகள் பாதுகாக்கப்படும் என்றும் உலக சமுதாயத்திற்கு இந்தியா உறுதியளித்துள்ளது

Posted On: 28 JUN 2022 5:52PM by PIB Chennai

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 2030ம் ஆண்டுக்குள் குறைந்தது 30% அளவிலான நிலம், நீர், கடல்  பகுதிகள் பாதுகாக்கப்படும் என்றும் உலக சமுதாயத்திற்கு இந்தியா இன்று  உறுதியளித்துள்ளது. போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்று வரும் ஐநா கடல்சார் மாநாட்டில் பேசிய இந்திய புவிஅறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,  கடல் மற்றும் கடலோர சுற்றுச்சூழல், மாங்குரோவ் காடுகள், பவளப்பாறைகள்  ஆகியவற்றை பாதுகாப்பதற்கு இந்தியாவின் முன்னெடுப்புகள், திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து பட்டியலிட்டார். கடல் மற்றும் கடல்சார் வளங்களை நீடித்த பயன்பாட்டுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை அடிப்படையாக கொண்ட தீர்வுகளை இந்தியா அளிக்கும் என்று அப்போது டாக்டர் ஜிதேந்திர சிங் உறுதியளித்தார்.  ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 130க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837642

***************



(Release ID: 1837679) Visitor Counter : 193