பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 28 JUN 2022 3:18PM by PIB Chennai

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட  எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் இன்று  இணைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் திரு விஎஸ் பதானியா தலைமை தாங்கினார். ராணுவம் மற்றும் குடிமைப்பணி அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர். தேடுதல் மற்றும் மீட்பு, கடலோர கண்காணிப்பு  ஆகிய துறைகளில் சுயசார்பை அடைந்ததை இது எடுத்துக்காட்டுகிறது. இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் இந்த மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெல்காப்டரை தயாரித்துள்ளது. இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் படிப்படியாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 4 ஹெலிகாப்டர்கள்  போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837579

 

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1837666) வருகையாளர் எண்ணிக்கை : 275
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu