ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெற்றிக் கதை: கிராமத் தூய்மை பாரத இயக்கத்தில் மாதவிடாய் தூய்மை மேலாண்மை

Posted On: 28 JUN 2022 1:25PM by PIB Chennai

 மஹாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலி மாவட்ட  நிர்வாகம். யூனிசெப் ஆதரவுடன் மாதவிடாய் காலத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்குவதற்கான  தனிக்குடில் அமைத்துள்ளது.  கோண்டு மற்றும் மாதியா  பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் சமூக கலாச்சார மற்றும் மத ரீதியாக சந்தித்து வரும் பிரச்சனைகளால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்குவதற்கு  அம்மாவட்ட நிர்வாகம் கடந்த 2018 ம் ஆண்டிலிருந்து உறுதியேற்றுள்ளது.

 

இதனையடுத்து அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள  பெண்கள் ஓய்வறை மையங்களில் கழிப்பறை, குளியலறை, சோப்புடன் கைகளை சுத்தம் செய்தல், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

அங்கு அவர்கள் தங்கியிருக்கும் காலத்தில் சுய உதவிக்குழு பணிகளில் ஈடுபடலாம். பொழுதுபோக்கு அம்சங்கள், நூலகம், தையல் எந்திரம், சமையல் அறை, தோட்டம் ஆகிய வசதிகளும் அங்கு இடம்பெற்றுள்ளது. மாவட்ட திட்ட மேலாண்மை குழு மூலம் இதுபோன்ற 23 மையங்கள் கட்டுப்பட்டுள்ளன.  முன்னோடி மாவட்ட திட்டத்தின் கீழ் சிறப்பு மத்திய உதவி நிதி மூலமும், மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலமும் இவை அமைக்கப்பட்டுள்ளன.   இந்த குடிலின் கட்டமைப்பு, வரைப்படம், சாதனங்கள் ஆகியவை உள்ளூர் விட்டு வசதிகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.  வரும் காலங்களில் 400க்கும் மேற்பட்ட மையங்களை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

விளைவு:

பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் முன்காலத்தை விட தற்போது ஊரக பகுதிகளில் மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேசப்பட்டு வருகிறது. பெண்களும், சிறுமிகளும் மாதவிடாய் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அடைந்துள்ளனர். 

கழிவுகளை அகற்றதல்: சேனட்டரி  கழிவுகளை பிளாஷ்டிக் மூலம் அகற்றுவது, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல. எனவே, திடக்கழிவு  மேலாண்மையின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மாநில நிர்வாகம் கழிவுகளை சேகரித்து அகற்றவேண்டிய தேவையுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837524

**********************

 


(Release ID: 1837585) Visitor Counter : 198