புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லிஸ்பனில் 27 ஜூன் முதல் 1 ஜூலை 2022 வரை நடைபெறவுள்ள “2022 ஐநா பெருங்கடல் மாநாட்டில்” பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று போர்ச்சுகல் புறப்பட்டு சென்றார்

Posted On: 25 JUN 2022 12:46PM by PIB Chennai

மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனி பொறுப்பு) மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், லிஸ்பனில் 27 ஜூன் முதல் 1 ஜூலை 2022 வரை நடைபெறவுள்ள “2022 ஐநா பெருங்கடல் மாநாட்டில்” பங்கேற்பதற்காக இன்று போர்ச்சுகல் புறப்பட்டு சென்றார். ஐநா சபை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் 130க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன.

 இந்தியாவின் சார்பில் ஐநா மாநாட்டில் பங்கேற்கும் டாக்டர் ஜிதேந்திர சிங், “அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு அடிப்படையில் பெருங்கடல் ஆய்வுகளை அதிகரிக்க இலக்கு-14: இருப்பு மதிப்பிடுதல், பங்குதாரர்கள் மற்றும் தீர்வுகள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

 தமது பயணத்தையொட்டி டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா, பங்குதாரர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகள் வாயிலாக இலக்கு14 நடைமுறைப்படுத்துவதற்கான அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு அடிப்படையிலான தீர்வுகளை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.  நீடித்த வளர்ச்சி இலக்கு குறியீடுகளுக்கான தரவு மற்றும் நடைமுறைகள் இடையேயான இடைவெளியை பூர்த்திசெய்ய ஐநா அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்தியா சிறந்த முறையில் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தூய்மையான, ஆரோக்கியமான, பயனுள்ள முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவல்ல, பாதுகாப்பான மற்றும் பெருங்கடலை அணுகுவதற்கான நீடித்த வளர்ச்சி அம்சங்களுக்காகவும் இந்தியா பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1836925

***************


(Release ID: 1836929) Visitor Counter : 252