சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்திற்கான ஒழுங்குமுறை

Posted On: 25 JUN 2022 11:53AM by PIB Chennai

பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம் தொடர்பாக மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் 126இ என்ற  புதிய விதி ஒன்றை சேர்க்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 24 ஜூன் 2022 தேதியிட்ட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கீழ்காணும் அம்சங்கள் இந்த புதிய விதியில் சேர்க்கப்படவுள்ளன:-

  1. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட 3.5 டன்னுக்கும் குறைவான எடை கொண்ட எம்1 வகை மோட்டார் வாகனங்களை அங்கீகரிக்க இது பொருந்தும். இத்தகைய வாகனங்களின் தரம் சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு இணையானதாக இருக்கும்: குறைந்தபட்ச ஒழுங்குமுறை தேவைகளுக்கும் அப்பாற்பட்டதாக  இது இருக்கும்.
  2. பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம், அந்த வாகனத்தை பயன்படுத்துவோருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்களின் அளவை நுகர்வோருக்கு தெரிவிக்கும் (a) வயது வந்த பயணியருக்கான பாதுகாப்பு (AOP) (b) குழந்தை பயணியருக்கான பாதுகாப்பு (COP) மற்றும் (c)  பாதுகாப்பு ஒத்துழைப்பு தொழில்நுட்பங்கள் (SAT) ஆகிய பிரிவுகளில் இந்த பாதுகாப்பு வழங்கப்படும். இத்தகைய வாகனங்களுக்கு, வாகன தொழில்தரம் 197-ன் படி, மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரிசோதனைகளில் வழங்கப்பட்ட தர மதிப்பெண் அடிப்படையில், ஒன்று முதல்  ஐந்து நட்சத்திரங்கள் வரை  நட்சத்திர குறியீடு அளிக்கப்படும்.
  3. இந்த திட்டத்திற்கான வாகன பரிசோதனை, தேவையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட பரிசோதனை முகமைகளில் மேற்கொள்ளப்படும்.
  4. நடைமுறைக்கு வரும் தேதி : 1 ஏப்ரல் 2023

இது குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் 30 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு கோரப்படுகிறது.

***************


(Release ID: 1836923) Visitor Counter : 251