புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் ஜூன் 27 முதல் ஜூலை 3 வரை வாராந்திர கொண்டாட்டத்துக்கு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஏற்பாடு
Posted On:
24 JUN 2022 2:20PM by PIB Chennai
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஜூன் 27 முதல் ஜூலை 3 வரை விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் கீழ் வாராந்திர கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஒரு வார கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கள செயல்பாட்டு பிரிவு நாடு தழுவிய அளவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான நாடு தழுவிய அளவில் மாநில தலைநகரங்களில் வினாடி வினா போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
விடுதலையின் அமிர்தப்பெருவிழா கொண்டாட்டத்தில் மாணவர்களை ஈடுபடுத்தும் உணர்வோடு, அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவும், இந்திய அதிகாரப்பூர்வ புள்ளியியல் அமைப்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இளைஞர்களுக்கு அறிவூட்டவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சி சர்தார் வல்லபாய் படேல் ஆடிட்டோரியத்தில் நடைபெறும். மாநிலத்தலைநகர் மண்டல அலுவலகம், டெல்லியின் கள செயல்பாட்டுப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியின் பல்வேறு கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க வாய்ப்புள்ளது. பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
***************
(Release ID: 1836736)
Visitor Counter : 157