சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜூன் 24 முதல் 26 வரை புதுச்சேரி மற்றும் சென்னையில் 3 நாள் பயணம் மேற்கொள்கிறார்

சுகாதாரம் மற்றும் உர அமைச்சக திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிலவரம் குறித்து டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொள்வார்

மருத்துவ பூச்சியியலில் பயிற்சிக்கான சர்வதேச செயல்திறன் மையத்துக்கு அடிக்கல் நாட்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ஜிப்மரில் சர்வதேச பொது சுகாதார பள்ளியை தொடங்கிவைப்பார்

சென்னை சிப்பெட் வளாகத்தில் புதிய தொழில்நுட்ப மையத்துக்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டுவார்

Posted On: 24 JUN 2022 10:33AM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலம், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை புதுச்சேரி மற்றும் சென்னைக்கு பயணம் மேற்கொள்கிறார். திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளில் அக்கறையுடன் கூடிய செயலாக்கம் மற்றும் ஒத்துழைப்பு அடிப்படையிலான பங்களிப்பை நோக்கமாக கொண்டு முழுமையான அணுகுமுறை மூலம் நீடித்த சுகாதார நடைமுறை முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் மத்திய சுகாதார அமைச்சரின் பயணம் அமையும்.

புதுச்சேரியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்,

 புதுச்சேரியில் சுகாதார நடைமுறையை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக டாக்டர் மன்சுக் மாண்டவியா 24-ந் தேதி அங்கு பயணம் மேற்கொள்கிறார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர்  ஆகியோர் முன்னிலையில், மருத்துவ பூச்சியியலில் பயிற்சிக்கான சர்வதேச செயல்திறன் மையத்துக்கு அடிக்கல் நாட்டுவார். அதன் பின்னர் பரவும் நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தில் (விசிஆர்சி) மேற்கொள்ளப்பட்டுள்ள நவீன வசதிகளை பார்வையிடும் அவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவார். விசிஆர்சியின் செயல்பாடுகள் குறித்து அதன் இயக்குனர் இந்த நிகழ்ச்சியில்  விளக்கம் அளிப்பார்.

 ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச பொது சுகாதார பள்ளியை தொடங்கிவைக்கும் டாக்டர் மாண்டவியா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடுவார்.

சுகாதார அமைச்சகம் மற்றும் உர அமைச்சகத்தின் கூட்டுக்கூட்டத்தில் அதன் செயல்பாடுகள் குறித்து டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொள்வார். கீழ்புதுப்பட்டில் உள்ள சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்துக்கு செல்லும் அமைச்சர் அங்கு இ-மருத்துவம் மற்றும் இ-சஞ்ஜீவனி குறித்து ஆய்வு செய்வார்.

 சென்னையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

சென்னை பயணத்தின் போது டாக்டர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு  சென்று, ஆவடியில் மத்திய அரசின் சுகாதார திட்ட நலவாழ்வு மையம் மற்றும் ஆய்வகத்துக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுவார். இதனைத் தொடர்ந்து மாநில இ-தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனருடன் அவர் ஆலோசனை மேற்கொள்வார்.  தேசிய சுகாதார இயக்கத்தின் சிறந்த நடைமுறைகள் பற்றிய விளக்கம் அப்போது அளிக்கப்படும்.

 பெட்ரோ ரசாயனத்துறையில், புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதனை பயன்படுத்துவதுடன், தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் தொழில்முனைவோரை கைதூக்கி விடுவதற்கும், அறிவுசார் சொத்துரிமை மற்றும் அறிவுதளத்தை விரிவுபடுத்தவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் வகையிலும் கிண்டியில் உள்ள மத்திய பெட்ரோ ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (சிப்பெட்) வளாகத்தில் புதிய தொழில்நுட்ப மையத்துக்கான அடிக்கல்லையும் டாக்டர் மன்சுக் மாண்டவியா நாட்டுகிறார். இதன் தொடர்ச்சியாக சிப்பெட் வளாகத்தை அவர் பார்வையிடுவார். மணலியில் உள்ள சென்னை உரத் தொழிற்சாலை (எம்எஃப்எல்), தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம், அண்ணாநகரில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கு ஆகியவற்றையும் அவர் பார்வையிடுவார்.

***************

(Release ID: 1836647)



(Release ID: 1836676) Visitor Counter : 199