விவசாயத்துறை அமைச்சகம்

உரங்கள் மற்றம் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க தனியார் நிறுவனங்கள் அரசுடன் கைகோர்க்கவேண்டும்: மத்திய வேளாண் அமைச்சர்

Posted On: 23 JUN 2022 6:07PM by PIB Chennai

விவசாயத்தில்உரங்கள் மற்றம் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க தனியார் நிறுவனங்கள் அரசுடன் கைகோர்க்கவேண்டும் என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தின் சோலன் நகரில் ஃபிக்கி சார்பில் நடந்த விவசாயத்தில் ரசயானங்கள் பயன்பாடு குறித்து 11 வது மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், விவசாயத்துறையில் விவசாயிகளுக்கு  உழைப்புக்கேற்ற ஊதியம்  என்பது முக்கியம் என்று கூறிய அவர்,  உற்பத்தி அதிகரிப்பதும் முக்கிய தேவையாக உள்ளது என்று கூறினார். மேலும் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விளைவிப்பதில் நாடு முக்கிய பணியை செய்துகொண்டிருப்பதாகவும், வேளாண்மையில் விவசாயிகளுக்கு வரும் லாபத்தை அதிகரிப்பது முக்கியமானது என்றும், அறுவடைக்கு பிந்தைய நஷ்டத்தை குறைப்பதற்கான வழிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.  இதற்காக, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளதாகவும், அதேநேரத்தில், விவசாயிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லாபம் தரும் பயிர்களை விளைவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தோட்டக்கலைத் துறையை ஊக்குவிப்பதன் மூலம், சுயசார்பை அடையலாம் என்று கூறிய அவர், உணவு தானிய உற்பத்தியில் நமது நாடு, சிறப்பான நிலையில் உள்ளதாகவும், விவசாய துறையில் முன்னேறிய நாடுகளுடன் பயணிப்பதன் மூலம் சர்வதேச நிலையை எட்டமுடியும் என்று கூறினார்.

விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் புதிதாக பத்தாயிரம் குழுக்கள்  தொடங்கப்பட்டுள்ளதாகவும்,  பல வகை பயிர்களை விவசாயிகள் பயிரிடவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஃபிக்கி போன்ற தொழில் அமைப்புகள் வேளாண் வளர்ச்சிக்கு இணைந்து பாடுபடவேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய ரசாயனங்கள், உரங்கள் மற்றும் புதிய மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி துறை இணையமைச்சர் திரு பகவந்த் குபா கலந்துகொண்டார்.

*******



(Release ID: 1836571) Visitor Counter : 156


Read this release in: English , Urdu , Marathi , Hindi