நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்தும் 36 வது மாநிலமாக அசாம் உருவெடுத்துள்ளது

இதன்மூலம், ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை வாயிலாக அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிலும் உணவு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது

Posted On: 21 JUN 2022 5:21PM by PIB Chennai

நாட்டில் ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்தும் 36 வது மாநிலமாக அசாம் உருவெடுத்துள்ளது.  இதன்மூலம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிலும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதுடன், உணவு பாதுகாப்பை நாடு முழுவதும் மாற்றிக்கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.

 கொவிட் -19 பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்ட கடந்த 2 ஆண்டு காலக்கட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மலிவு விலை உணவு தானியங்களை பயனாளிகளுக்கு, குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதை உறுதி செய்வதில், ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை முக்கிய பங்காற்றியுள்ளது.  நாட்டில் செயல்படுத்தப்படும்  மக்கள் நலன்சார்ந்த திட்டங்களில் ஒன்றான இத்திட்டம், 80 கோடி பயனாளிகளுக்கும்  பயனளிக்கும் விதமாக, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆகஸ்ட் 2019-ல் இருந்து  குறுகிய காலத்திற்குள் செயல்படுத்தப்பட்டது.

 இத்திட்டம் செயல்படுத்த தொடங்கியதிலிருந்து 71 கோடி புலம்பெயர்ந்த பரிவர்த்தனைகள் (தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 43.6 கோடி மற்றும்  பிரதமரின் கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின்கீழ் 27.8 கோடி பரிவர்த்தனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் புலம்பெயர்ந்த இடங்களில் சுமார் ரூ.40,000 கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் ஒரே தேசம், ஒரே குடும்பம் அட்டை திட்டத்தின்கீழ்  வினியோகிக்கப்பட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்று காலத்தில் மட்டும் (ஏப்ரல் 2020 முதல் இதுவரை) ரூ. 36,000 கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திகுறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835960

 ***************


(Release ID: 1836048) Visitor Counter : 267