கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்திய கடற்படை வீரர்கள் வணிக கப்பலில் பணிபுரிவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கப்பல் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குனர் மற்றும் இந்திய கடற்படையிடையே கையெழுத்தாகியுள்ளது
Posted On:
21 JUN 2022 4:09PM by PIB Chennai
மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின்கீழ் இயங்கும் கப்பல் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குனர் 20 ஜூன் 2022 அன்று பிறப்பித்த உத்தரவில், இந்திய கடற்படை வீரர்களை கடல் வாணிப தொழிலுக்கு மாற்றுவதற்கான 16 திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படையுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்த மாற்றுத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.
ஓய்வு பெற்ற இந்திய கடற்படை வீரர்கள், வணிக கப்பல்களில் பணியாற்றுவதற்கான தகுதி சான்றிதழ்களை பெற்று, கடல் வாணிபத் துறையில் பணிபுரிய சுமூகமாக மாற்றுவதற்கு இந்த திட்டங்கள் வகை செய்கிறது.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடற்படையின் வைஸ் அட்மிரல் தினேஷ் கே திரிபாதியும், கப்பல் போக்குவரத்துத்துறை தலைமை இயக்குனரகம் சார்பில் அதன் தலைமை இயக்குனர் திரு அமிதாப்குமாரும் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835911
***************
(Release ID: 1835982)
Visitor Counter : 183