சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மைசூரில் பெரியளவிலான யோகா கூட்டுப் பயிற்சி மூலம் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை வகித்தார்.
டாக்டர் மன்சுக் மாண்டவியா சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஒற்றுமை சிலை தளத்திலிருந்து குஜராத் மக்களுடன் யோகா பயிற்சி மேற்கொண்டார்.
प्रविष्टि तिथि:
21 JUN 2022 10:21AM by PIB Chennai
8-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மைசூரில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் இன்று நடைபெற்ற பெரிய அளவிலான யோகா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி யோகா பயிற்சியில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “யோகா இப்போது உலகளாவிய திருவிழாவாக மாறிவிட்டது. யோகா என்பது எந்த ஒரு தனி மனிதனுக்கும் அல்ல, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் உரியது. எனவேதான், இம்முறை சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் - மனிதகுலத்திற்கான யோகா”, என்று கூறினார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சர்வதேச யோகா தினத்தைக் முன்னிட்டு, கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை தளத்திலிருந்து குஜராத் மக்களுடன் யோகா பயிற்சி மேற்கொண்டார்.
அன்றாட வாழ்வில் யோகாவால் ஏற்படும் நன்மைகளை குறித்து எடுத்துரைத்த மத்திய சுகாதார அமைச்சர், “யோகா நமது பண்டைய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற பரிசு. யோகா என்பது மனம் மற்றும் உடல், சிந்தனை மற்றும் செயல் ஆகியவற்றின் ஒற்றுமையை உள்ளடக்கியது. இது ஒரு முழுமையான அணுகுமுறையாகும், இது நமது ஆரோக்கியத்திற்கும் நமது நல்வாழ்விற்கும் விலைமதிப்பற்றது." அவர் மேலும் கூறுகையில், "யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல; அது உங்களுக்குள்ளும், உலகம் மற்றும் இயற்கையோடும் உள்ள ஒற்றுமை உணர்வைக் கண்டறியும் ஒரு வழியாகும்.", என்று கூறினார்.
***************
(रिलीज़ आईडी: 1835812)
आगंतुक पटल : 157