பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 19 JUN 2022 8:35PM by PIB Chennai

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள எனது அமைச்சரவை சகாக்களே, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்க்காடி டிவோர்க்கோவிச் அவர்களே, அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் அவர்களே, பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதர்களே, அதிகாரிகளே, செஸ் மற்றும் பல்வேறு விளையாட்டுகளின் பிரதிநிதிகளே, மாநில அரசின் பிரதிநிதிகளே, பிற துறைகளின் உயரதிகாரிகளே, செஸ் ஒலிம்பியாட் குழு உறுப்பினர்களே, செஸ் விளையாட்டு வீரர்களே, சகோதர, சகோதரிகளே,

இந்தியாவில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முதல் ஜோதி ஓட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இந்தியா முதன்முறையாக நடத்தவுள்ளது. இந்த விளையாட்டு அதன் பிறப்பிடத்திலிருந்து உலகம் முழுவதும் பரவி, முத்திரையை பதித்துள்ளதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த விளையாட்டு தற்போது பல நாடுகளில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. செஸ் அதன் பிறப்பிடத்தில் தற்போது சர்வதேச நிகழ்ச்சியாக கொண்டாடப்படுவதில் நாங்கள் பெருமையடைகிறோம். இந்த விளையாட்டு, பல ஆண்டுகளுக்கு முன் 'சதுரங்க' வடிவத்தில் உலகம் முழுவதும் பயணித்தது. தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதி உலகின் பல நாடுகளுக்கும் பயணிக்கிறது. தற்போது இந்தியா 75-வது ஆண்டு சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடி வரும் வேளையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி 75 நகரங்களுக்கு பயணிக்கிறது. இனி, ஒவ்வொரு செஸ் ஒலிம்பியாட்  போட்டியின் ஜோதி ஓட்டமும் இந்தியாவிலிருந்தே தொடங்கும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு செய்துள்ள முடிவை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல, பாரம்பரியமிக்க சதுரங்கத்துக்கு கிடைத்த கவுரவமாகும். இந்த முடிவை எடுத்த சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல. யார் வென்றாலும் இது இந்த விளையாட்டின் வெற்றியாகும். மாமல்லபுரத்தில் நடக்கும் விளையாட்டில் நீங்கள் அனைவரும் மிகுந்த உத்வேகத்துடன் விளையாடுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835357

                              ***************


(रिलीज़ आईडी: 1835764) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , हिन्दी , Punjabi , Telugu , Kannada , Malayalam , Bengali , Assamese , Odia , English , Marathi , Manipuri