சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வுகள் வாரியத்தின் 21-வது பட்டமளிப்பு விழாவிற்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்

Posted On: 20 JUN 2022 2:55PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று நடைபெற்ற  மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வுகள் வாரியத்தின் 21-வது பட்டமளிப்பு விழாவிற்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா  காணொலி வாயிலாக தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.  தேசிய வாரியத்தின் டிப்ளமா, தேசிய வாரியத்தின் டாக்டர் பட்டம், தேசிய வாரியத்தின் முதுநிலை ஆய்வாளர் பட்டம் என்ற  பெயர்களில் 17,467 பேருக்கு  சிறப்பு மருத்துவர்கள் பன்னோக்கு சிறப்பு மருத்துவர்கள் பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவில் மிகச்சிறந்த பணியாற்றியமைக்காக 210 டாக்டர்களுக்கு கௌரவத்திற்குரிய விருதுகள் வழங்கப்பட்டன.  21-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை உரை ஆற்றிய மத்திய அமைச்சர், புதிய இந்தியாவை உருவாக்குவதில் மருத்துவர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும், அவர்களின் உண்மையான உறுதிப்பாடும், அர்ப்பணிப்பும் இதனை சாத்தியமாக்கும் என்றும் கூறினார்.

  எளிதில் கிடைக்கவல்ல, குறைந்த செலவிலான நட்பு ரீதியிலான சுகாதார கவனிப்பு என்ற நடைமுறையை நோக்கி நாடு முன்னேறி கொண்டிருப்பதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.  ஆரோக்கியமான, கூடுதல் வளமான இந்தியா என்ற நமது இலக்கை எட்டுவதற்கு அனைவருக்கும் சேவை செய்ய நாம் முயற்சித்து வருகிறோம்.  பல்வேறு வகைகளில் நமது முன்னேற்றம் குறிப்பிடத்தக்கவகையில் உள்ள போதும் முன்னெப்போதையும் விட இப்போது இந்தியா ஆரோக்கியமாக உள்ளது. அனைவருக்கும் சுகாதாரம் என்ற பிரதமரின் கனவை நனவாக்க நீண்டதூரம் நாம் செல்லவேண்டியுள்ளது என்று அவர் கூறினார். மருத்துவ ரீதியில் ஆய்வு செய்யாமல், தற்போதைய சிகிச்சை முறைகளை விட, புதிய சிகிச்சை முறைகள் சிறந்தவை என்று நாம் முடிவு செய்ய இயலாது. எனவே மருத்துவ ரீதியிலான ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவது அவசியம் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.

 பட்டமளிப்பு விழாவில்  பேராசிரியர்களையும், ஊழியர்களையும், மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் பாராட்டி பேசினார்.  பெருமைமிக்க மருத்துவ தொழிலில் ஈடுபடவிருக்கும் மருத்துவர்கள், இப்போதிலிருந்து கடவுளின் மிகவும் மதிப்புமிகு படைப்பை நீங்கள் கையாளவிருக்கிறீர்கள். அந்த சமயத்தில் தொழில்முறை ரீதியாகவும், மனிதாபிமான ரீதியாகவும் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  உங்களின் கூட்டான முயற்சி காரணமாக இந்தியாவை இந்த நூற்றாண்டின் உலகளாவிய சுகாதார மையமாக மாற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.

 இந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர்  திரு ராஜேஷ் பூஷன், அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம் ஆர் கிரிநாத், மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வுகள் வாரியத்தின் தலைவர் டாக்டர் அபிஜித் சேத் இதன் கௌரவ செயல் இயக்குனர் டாக்டர் மீனு பாஜ்பாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835502

***************


(Release ID: 1835564) Visitor Counter : 197