ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள கோல் கும்பாஷ் வளாகத்தில் 21 ஜுன் 2022-ல் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் மத்திய ரசாயன உரத்துறை இணையமைச்சர் திரு.பகவந்த் கூபா பங்கேற்கிறார்

प्रविष्टि तिथि: 18 JUN 2022 6:10PM by PIB Chennai

8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு அரண்மனை வளாகத்தில்  நடைபெறும் யோகா தின நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையேற்க உள்ளார்.  . 

நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடப்படுவதைப் போன்றுசர்வதேச யோகா தினத்திற்கும், 75 புராதன/ வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனஅவற்றுள், கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள கோல் கும்பாஸ்-ம் ஒரு இடமாகும்.   21 ஜுன் 2022 அன்று இங்கு நடைபெறவுள்ள  சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு, மத்திய ரசாயன உரத்துறை இணையமைச்சர் டாக்டர் திரு.பகவந்த் கூபா தலைமையேற்க உள்ளார்.   இம்மாநிலத்தில், மைசூரு, விஜயபுரா தவிர, ஹம்பி, ஹலேபீடு, பட்டாடகால் ஆகிய இடங்களிலும் சர்வேதேச யோகா தின விழா நடைபெற உள்ளது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835103

***


(रिलीज़ आईडी: 1835138) आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada