பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மகப்பேறு நன்மைச் சட்டம், 1961-ல் இறுதி சட்ட மறுஆய்வு ஆலோசனைக்கு தேசிய மகளிர் ஆணையம் ஏற்பாடு
Posted On:
18 JUN 2022 5:34PM by PIB Chennai
மகப்பேறு நன்மைச் சட்டம், 1961-ல் இறுதி சட்ட மறுஆய்வு மற்றும், பெண்களை பாதிக்கும் சட்டத்தை மறு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு செய்வதுடன், இச்சட்டங்களில் குறைபாடு ஏதுமிருப்பின் அவற்றை சரிசெய்வதற்கான திருத்தங்களை பரிந்துரைப்பது குறித்த ஆலோசனைக்கு தேசிய மகளிர் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
பெண்கள் தொடர்பான சட்ட ரீதியான மற்றும் அரசியல் சாசன பாதுகாப்பு அம்சங்களை மறுஆய்வு செய்ய வேண்டுமென்ற ஆணையத்தின் நடைமுறைக்கேற்ப, ஒருமுறை தொடக்க ஆலோசனை நடத்தியுள்ள தேசிய மகளிர் ஆணையம், மண்டல அளவிலான ஆலோசனைகளை ஐந்து முறை நடத்தியுள்ளது.
இந்த ஆலோசனைகளின்போது, சட்டநிபுனர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழு, குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பை பெற்றோர் இருவரும் சமமாக பகிர்ந்து கொள்வது, வேலை வழங்குவோருக்கு ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் பெருநிறுவனங்களில் அதிகளவில் பெண் ஊழியர்களை சேர்க்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பரிந்துரைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835092
***
(Release ID: 1835120)
Visitor Counter : 368