இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அக்னிபத் திட்டம் குறித்து நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடம் நேரு இளைஞர் மையம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்

प्रविष्टि तिथि: 17 JUN 2022 5:55PM by PIB Chennai

புதிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சீர்திருத்தத் திட்டமான அக்னிபத் திட்டம் குறித்த சிறப்பு அம்சங்களை நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதை, நேரு இளைஞர் மையம் ஒரு இயக்கமாக மேற்கொள்வதுடன், இத்திட்டத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

          இதுகுறித்து மத்திய இளைஞர் நலத்துறை செயலாளர் திரு.சஞ்சய் குமார், நேரு இளைஞர் மையத்தின் மண்டல இயக்குனர்கள், மாநில இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட இளையோர் நல அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி, இத்திட்டத்தை பிரபலப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

          இந்தப் பிரச்சார இயக்கத்தில் இளைஞர் தன்னார்வலர்களை அதிகளவில் திரட்ட பாடுபடுமாறும் நேரு இளைஞர் மையத்தின் கிளை அமைப்புகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1834841  

***************


(रिलीज़ आईडी: 1834894) आगंतुक पटल : 247
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi