பாதுகாப்பு அமைச்சகம்

ஜம்மு- காஷ்மீர் எல்லைப்பகுதிக்கு சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர்,எல்லைப்புற பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்தார்

Posted On: 16 JUN 2022 4:08PM by PIB Chennai

ஜூன் 16, 2022 அன்று ஜம்மு - காஷ்மீர் எல்லைப்பகுதிகளை பார்வையிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், எல்லைப்புற பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்தார்.  இரண்டு நாள் பயணமாக அங்கு சென்ற திரு ராஜ்நாத் சிங், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும், வட காஷ்மீரிலும் எல்லைப்புற நிலவரத்தை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, வட பிராந்திய  லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திர துவிவேதி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

எல்லைக்காட்டுபாட்டு கோடு பகுதியில் கடைப்பிடிக்கப்படும் சண்டைநிறுத்த ஒப்பந்தம், கள நிலவரம், ஊடுருவல் எதிர்ப்பு, போர் ஆயுத்த நிலை, எல்லைப்பகுதிகளில் ராணுவம்- பொதுமக்களிடையேயான தொடர்பு குறித்து அமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கி கூறினர்.

ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப்படை, மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினரிடம் கலந்துரையாடிய திரு ராஜ்நாத் சிங், சவாலான காலகட்டங்களிலும் தங்களது பொறுப்பை திறம்பட நிறைவேற்றி வருவதற்காக வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த வீரர்களின் வீரம் மற்றும் துணிச்சல் போற்றத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார். உள்ளூர் நிர்வாகம், மாநில காவல் துறை, மத்திய ஆயுதகாவல் படைகள் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளிடையே காணப்படும் ஒருங்கிணைந்த செயல்பாட்டினையும் அவர் பாராட்டினார்அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறை காரணமாக இந்த யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு நிலவரம் மேம்பட்டிருப்பது, வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி வருவதாக அவர்  கூறினார்பாதுகாப்பு படையினர், அசைக்க முடியாத துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டிற்காக பணியாற்றுவது, மக்களிடையே குறிப்பாக, இளைஞர்களிடையே தேசம்பற்றிய பெருமிதத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நமது அண்டை நாடு, எப்போதும் இந்தியா எதிர்ப்பு நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது. இந்த மாநிலத்திலும் கடந்த காலத்தில் தீவிரவாத சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. பாதுகாப்பு படையினரின் அயராத முயற்சிகள் காரணமாக தற்போது இங்கு தீவிரவாத செயல்கள் குறைந்துள்ளது. இந்தியாவில் ரத்தகளரியை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைப்பதையே நோக்கமாக கொண்டு பாகிஸ்தான் செயல்படுகிறது. எத்தகைய நிலைமையையும் சமாளிக்க எப்போதும் தயாராக உள்ள நமது படையினர் மீது நாடு மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1834534

***************



(Release ID: 1834613) Visitor Counter : 129


Read this release in: English , Urdu , Marathi , Hindi