நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

75-வது சுதந்திரதின அமுத பெருவிழா, 8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் யோகா பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு

Posted On: 16 JUN 2022 4:06PM by PIB Chennai

75-வது சுதந்திரதின அமுத பெருவிழா, 8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, யோகா குரு டாக்டர் சுரக்ஷித் கோஸ்வாமியின் வழிகாட்டுலின்படி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில், 2022 ஜூன் 15-ம் தேதி, புதுதில்லியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. அமைச்சகத்தின் கூடுதல் செயலர் டாக்டர். சத்ய பிரகாஷ் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து, நம் அன்றாட வாழ்வில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

டாக்டர் சுரக்ஷித் கோஸ்வாமி, அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு யோகா மற்றும் பிராணாயாமத்தை கற்றுக் கொடுத்தார். யோகா செய்வதன் மூலம் மனஅழுத்தம் நீங்கி, பணி திறனை அதிகரிக்க முடியும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில், டாக்டர்.சத்ய பிரகாஷ், கூடுதல் செயலர், திருமதி.சுமன் பாரா உட்பட அமைச்ச ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

***************



(Release ID: 1834573) Visitor Counter : 135