தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav g20-india-2023

குடியரசுத் தலைவர் தேர்தல்,2022

Posted On: 16 JUN 2022 11:49AM by PIB Chennai

குடியரசுத்தலைவர் தேர்தல் 2022 குறித்து தேர்தல் ஆணையம் 15 ஜூன்  2022 அன்று மத்திய அரசின்  சிறப்பு அரசிதழில் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி கீழ்க்காணுமாறு  தேர்தலுக்கான அட்டவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29, 2022

வேட்புமனு பரிசீலனை நாள் ஜூன் 30, 2022

வேட்பு மனுவை திரும்ப பெற கடைசிநாள் ஜூலை 2, 2022

தேவைப்பட்டால் தேர்தல் நடைபெறும் நாள் ஜூலை 18, 2022

2022, ஜூன் 13 அன்று வெளியிட்ட மற்றொரு அறிவிக்கையின் படி நாடாளுமன்ற மாநிலங்களவையின் தலைமை செயலாளர் திரு பி சி மோடியை குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக ஆணையம் நியமித்துள்ளது. சிறப்பு பணி அதிகாரி திரு முகுல் பாண்டே, மாநிலங்களவை செயலகத்தின் இணை செயலாளரும், தலைமை கண்காணிப்பு அதிகாரியுமான திரு சுரேந்திர குமார்  திரிபாதி ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசிதழ்களிலும் தேர்தல் அதிகாரிகள் அறிவிக்கைகளை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பான விசாரணைகளுக்கு தேர்தல் அதிகாரி திரு பி சி மோடியை சனிக்கிழமை உட்பட அனைத்து வேலை நாட்களிலும் பிற்பகல் 3.30 மணிக்கும், 4.30 மணிக்கும் இடையே அறை எண் 29, தரைத்தளம், நாடாளுமன்ற வளாகம், புதுதில்லி என்ற அவரது அலுவலக முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1834453

 

                                                                                            ***************



(Release ID: 1834472) Visitor Counter : 262