பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நொடித்துப் போதல் மற்றும் திவாலாதல் தொடர்பான வாரிய (நிறுவனதாரர்களுக்கான நொடித்துப் போதல் தீர்மான நடைமுறைகள்) முறைப்படுத்தலில் நொடித்துப் போதல் மற்றும் திவாலாதல் தொடர்பான வாரியம் திருத்தங்களைச் செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 15 JUN 2022 5:38PM by PIB Chennai

நொடித்துப் போதல் மற்றும் திவாலாதல் தொடர்பான  வாரிய (நிறுவனதாரர்களுக்கான நொடித்துப் போதல் தீர்மான நடைமுறைகள்) முறைப்படுத்தலில் நொடித்துப் போதல் மற்றும் திவாலாதல் தொடர்பான வாரியம் 2022 ஜூன் 14 அன்று திருத்தங்களைச் செய்துள்ளது.  இந்த திருத்தங்கள் இன்று முதல் அமலாகின்றன. 

இதன்படி கடன் பெற்றவர்கள், சட்டப்பிரிவு 7 அல்லது 9-ன் கீழ் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யும் போது தகவல் போக்குவரத்து சுமூகமாக இருப்பதை உறுதி செய்ய அவர்களின் நிரந்தர கணக்கு எண் (பான்), மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

தகவல் கிடைக்கும் விவரங்களை மேம்படுத்தும் வகையில்,  பெருநிறுவன  கடன்தாரர், அதன் ஊக்குவிப்பாளர் அல்லது நிர்வாகத்தோடு தொடர்புடைய இதர நபர் புதிய படிவத்தில் நேரம் குறிப்பிட்டு தகவல் தெரிவிக்க இந்தத் திருத்தம் வகை செய்கிறது.

திருத்தங்கள் குறித்த முழு விவரங்களை www.ibbi.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1834317) வருகையாளர் எண்ணிக்கை : 316
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी