சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ராஜஸ்தானின் கிழக்கு - மேற்கு வழித்தடத்தில், கோட்டா புறவழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை 76 சாம்பல் ஆற்றின் குறுக்கே கம்பியால் இணைக்கப்பட்ட பாலம் கட்டுமானப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் முடிவுற்றன

Posted On: 14 JUN 2022 12:02PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி, ராஜஸ்தானின் கிழக்கு - மேற்கு வழித்தடத்தில், கோட்டா புறவழிச்சாலையில், தேசிய நெடுஞ்சாலை 76-ன்படி, சாம்பல் ஆற்றின் குறுக்கே கம்பியால் இணைக்கப்பட்ட பாலம் கட்டும் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையில் இயங்கும் அரசு, நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 24 மணி நேரமும் ஓய்வின்றி செயல்பட்டு வருகிறது.

சாம்பல் ஆற்றின் குறுக்கே 1.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு கம்பியால் இணைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம், சுமார் 214 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் திரு.நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்தப் பாலம் கோட்டா புறவழிச்சாலையின் ஒருபகுதியாகவும், குஜராத்தின் போர்பந்தர் முதல் அஸ்ஸாமின் சில்ச்சர் வரையிலான பகுதியை இணைக்கும் பாலமாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகப் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் விதமாகவும், கனமழை, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை சமாளிக்கும் விதமாகவும் அதிநவீன கட்டமைப்புகளுடன் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

***************



(Release ID: 1833752) Visitor Counter : 165