வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் 2022 மே மாதத்தில் 15.88%-மாக உள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
14 JUN 2022 12:25PM by PIB Chennai
2021 மே மாதத்தில் 13.11% என்பதுடன் ஒப்பிடுகையில். 2022 மே மாதத்தின் வருடாந்திர பணவீக்க விகிதம் 15.88%மாக உள்ளது. தாது எண்ணெய், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் கச்சா பொருட்கள், உணவுப் பொருட்கள், மூல உலோகங்கள், உணவு அல்லாத பொருட்கள், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட அதிகரித்திருப்பதால் 2022 மே மாதத்தின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதத்தை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் இன்று வெளியிட்டது. இந்த விலைக் குறியீட்டெண் ஒவ்வொரு மாதமும் 14ம் தேதி வெளியிடப்படுகிறது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தோராயமான பணவீக்க விகிதம், பத்து வாரங்களுக்கு பின், இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1833734
------
(வெளியீட்டு அடையாள எண்: 1833748)
வருகையாளர் எண்ணிக்கை : 275