நிதி அமைச்சகம்
மத்திய நிதி அமைச்சகம் சார்பிலான சுதந்திரத்தின் 25-வது ஆண்டுப்பெருவிழா சிறப்பு வாரத்தின் நிறைவு நிகழ்ச்சி சனிக்கிழமை கோவாவில் நடைபெறும்
Posted On:
10 JUN 2022 2:51PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகம் சார்பிலான சுதந்திரத்தின் 25-வது ஆண்டுப்பெருவிழா சிறப்பு வாரத்தின் நிறைவு நிகழ்ச்சி சனிக்கிழமை கோவாவில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்பார். மத்திய மறைமுக வரிகள் வாரியம், சுங்கம், மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய், பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதிச்சேவைகள் துறை ஆகியவற்றின் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
முதலாவது நிகழ்வாக பனாஜியில் கட்டப்பட்டுள்ள சுங்கம் மற்றும் ஜிஎஸ்டியின் தேசிய அருங்காட்சியகம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். இதைத் தொடர்ந்து தரோஹார் என்ற குறும்படம் திரையிடப்படும்.
கடந்த 75 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்திற்கு மத்திய பட்ஜெட்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் சிறு கையேடும் வெளியிடப்படும். சுதந்திரத்திற்கு பிறகு மத்திய பட்ஜெட்டின் பயணத்தை எடுத்துக்காட்டும் குறும்படமும் இந்த விழாவில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832904
***************
(Release ID: 1832938)
Visitor Counter : 150