மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பிரதமரின் மீன்வள பாதுகாப்பு திட்டத்தின் தகவல்பலகை வெளியீடு

Posted On: 09 JUN 2022 1:44PM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா என்பது டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகம் மற்றும் அறிவுப் பொருளாதாரமாக நாட்டை மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய மத்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். சான்று அடிப்படையிலான முடிவெடுப்பதில் செயல்படும் ‘நல்லாட்சி’ கலாச்சாரத்தை கட்டமைக்கும் நோக்கத்துடன் அரசின் பல அமைச்சகங்கள் மற்றும் துறைகளை இந்தத் திட்டம் உள்ளடக்கியது. தொழில்நுட்பத்தை அதிகாரமளிப்பதற்கான வழிமுறையாகவும், நம்பிக்கைக்கும் வாய்ப்புக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறைக்கும் கருவியாகவும் பயன்படுத்துவது பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, பிரதமரின் மீன்வள பாதுகாப்பு திட்டத்தின் தகவல் பலகையை கடந்த  7-ந் தேதி அன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் டாக்டர் எல் முருகன், மீன்வளத்துறை செயலர் திரு ஜே.என். ஸ்வைன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் செயலாளர் திரு அதுல் சதுர்வேதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், மே 2020 இல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.20,050 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது.

இன்றுவரை, 2020-22 காலகட்டத்தில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 7242.90 கோடி மொத்த திட்ட முதலீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பரந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, பல இடங்கள் மற்றும் கூறுகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகரும் போது, ​​ஒரே தளத்தில் தகவல்களை ஒருங்கிணைக்க ஒரு மேலாண்மை தகவல் அமைப்பை வைப்பது இன்றியமையாதது.  இந்த தகவல் பலகை திட்டச் செயல்பாடுகளை திறம்பட கண்காணிப்பதையும், பங்கேற்கும் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அவற்றின் முன்னேற்றத்தையும் கண்காணிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832551

***************



(Release ID: 1832593) Visitor Counter : 185