இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஜார்க்கண்டைச் சேர்ந்த சிறுவர்கள் வறுமையை வென்று ஆர்வத்துடன் விளையாடி கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியின் ஹாக்கிப் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்
Posted On:
08 JUN 2022 2:33PM by PIB Chennai
ஜார்க்கண்டைச் சேர்ந்த சிறுவர்கள் வறுமையை வென்று ஆர்வத்துடன் விளையாடி கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியின் ஹாக்கிப் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-வது தேசிய ஆடவர் சப் ஜூனியர் ஹாக்கிப் போட்டியில், கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்தனர். அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள், வறுமைக்கு எதிராகப் போராடி வென்று அணியில் இணைந்துள்ளனர். மனோகர் முண்டு, அபிஷேக் முண்டு, துகா முண்டா, பில்சன் டாட்ரே உள்ளிட்டவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு ஹாக்கி அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில், ஜார்க்கண்டைச் சேர்ந்த சிறுவர் மற்றும் சிறுமிகள் அணி கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில், ஹாக்கிப் பிரிவில் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். குறைந்தபட்சம் ஒரு தங்கப்பதக்கத்தை வெல்ல முடியும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
***************
(Release ID: 1832113)
Visitor Counter : 174