உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

தேசிய வான் விளையாட்டுகள் கொள்கையை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா வெளியிட்டார்


இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.8,000 கோடி வருவாய் கிடைக்கும் 1,00,000 நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்: திரு சிந்தியா

Posted On: 07 JUN 2022 5:13PM by PIB Chennai

தேசிய வான் விளையாட்டுகள் கொள்கையை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா இன்று  வெளியிட்டார்.  2030க்குள் பாதுகாப்பான, குறைந்த செலவிலான, எளிதில் பெறக்கூடிய, ரசிக்கத்தக்க, நீடிக்கவல்ல, வான்விளையாட்டுகள் சூழலை இந்தியாவில் உருவாக்குவது இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.8,000 கோடி வருவாய் கிடைக்கும்  1, 00,000 நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அமைச்சர்  திரு சிந்தியா தெரிவித்தார். 35 வயதுக்கு குறைவான இளைஞர்கள் இந்த விளையாட்டுகளுக்கு ஊக்கமளிக்கப்படுவார்கள். கடுமையான குளிர்காலத்தை கொண்டுள்ள உலகின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த விளையாட்டு ஆர்வலர்களை இந்த வான் விளையாட்டுகள் கவரும் என்று அவர் கூறினார். இதன் மூலம் சுற்றுலாவும் அதனை சார்ந்த துறைகளும் 3 மடங்கு வளர்ச்சி அடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களும் வானிலிருந்து கரணம் அடிக்கும் வீரர்களுமான ஷீத்தல் மகாஜன், ரேச்சல் தாமஸ் ஆகியோருடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831844

 

                                                                                                                               ***************



(Release ID: 1831900) Visitor Counter : 479


Read this release in: English , Urdu , Hindi , Odia , Telugu