குடியரசுத் தலைவர் செயலகம்

மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு 2022-ஐ குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்து விருதுகளையும் வழங்கினார்

Posted On: 07 JUN 2022 6:31PM by PIB Chennai

மத்திய பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் இயக்குனர்கள் பங்கேற்கும்  2 நாள் மாநாட்டை குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று (ஜூன் 7, 2022) தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் உயர் கல்விக்கான 161 மத்திய நிறுவனங்களில்  53 நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவும் மற்றவர்கள் இணையதளம் வழியாகவும் கலந்து கொள்கின்றனர்.

சுதந்திரத்தின் 75 வது ஆண்டு பெருவிழாவின் உயர்கல்வி நிறுவனங்களின் பங்களிப்பும், பொறுப்பும்; உயர் கல்வி நிறுவனங்களின் சர்வதேச தரவரிசை;  கல்வியாளர்கள் – தொழில் துறையினர், கொள்கை உருவாக்குவோர் இடையே ஒத்துழைப்பு; பள்ளிக் கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு; வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சி போன்றவை இந்த மாநாட்டு அமர்வுகளின் தலைப்புகளாக இருக்கும்.  

இன்றைய தொடக்க அமர்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், நமது இலக்குகளை அடைவதற்கு உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். க்யூஎஸ் தரவரிசை பெற்றவையாக கடந்த ஆண்டு 29 இந்திய கல்வி நிறுவனங்கள் இருந்தநிலையில், இந்த ஆண்டு இது 35 ஆக அதிகரித்திருப்பது பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உயிரி தொழில்நுட்பம், தொழில்நுட்ப மேம்பாடு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் கல்வியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1831868

                                                                                                                                   --------



(Release ID: 1831893) Visitor Counter : 180