குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஜூன் 6, 2022 அன்று கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற சமூக வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவரின் உரை

Posted On: 07 JUN 2022 11:29AM by PIB Chennai

கத்தாரில் உள்ள எனது அன்பார்ந்த இந்திய சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு பி. ரவீந்திரநாத், திரு சுஷில் குமார் மோடி, திரு விஜய் பால் சிங் தோமர் ஆகியோர் உடன் உள்ளனர்.

கத்தாரில் வசிக்கும் 7.80 லட்சம்  இந்திய சமூகத்தினர் இரு நாடுகளுக்கு இடையேயான பாலமாக திகழ்கிறார்கள். இந்தியா மற்றும் கத்தார் இடையேயான உறவு வலுவடைந்து வருகிறது. கொவிட்-19 சவாலுக்கு இடையேயும் கடந்த ஆண்டு சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இருநாட்டு வர்த்தகத்தை நாம் பதிவு செய்து சாதனை படைத்தோம். இந்தியா, கத்தாரின் 3-வது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக உள்ளது. மார்ச் 2020 முதல் இந்தியாவில் கத்தாரின் அந்நிய நேரடி முதலீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு, ராணுவம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. கத்தார் பல்கலைக்கழகத்தில் இந்திய அமர்வை நிறுவவும், விளையாட்டு மற்றும் கலாச்சாரத்தில் ஒத்துழைப்பை அளிக்கவும் நேற்று நாங்கள் சம்மதம் தெரிவித்தோம். இரு நாடுகளின் புதிய கண்டுபிடிப்புகள் சூழலியலை இணைப்பதற்காக ஓர் புதிய நிறுவனங்களின் பாலத்தை அறிமுகப்படுத்தினோம்.

நண்பர்களே,

எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையுடன், நாம் அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் லட்சியத்தோடு அரசு பணியாற்றி வருகிறது. ஆளுகையிலும், சேவைகளின் விநியோகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, மக்களின் நலனுக்காக, தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, மக்களை மையப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

டிஜிட்டல் இந்தியா என்ற லட்சியமிக்க இயக்கத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு துவக்கியது. இதன்மூலம் கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு உதவிகள் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டன.

5ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளோம், இதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு 450 பில்லியன் டாலர் வரை கிடைக்கும். 6ஜி சேவைகள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் துவக்கப்படும்.

அணுகக்கூடிய, உயர்தர கல்வி அமைப்புமுறையை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை புதிய தேசிய கல்வி கொள்கை வழங்குகிறது.

உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும், 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவில் பொருளாதாரத்தை உயர்த்தவும் இந்தியா முயற்சிகளை மேற்கொள்கிறது. எளிதான வாழ்வு மற்றும் எளிதான வர்த்தகத்தை வலியுறுத்துகிறோம்.

நண்பர்களே,

விடுதலையின் அமிர்த மகோத்சவத்தை நாடு கொண்டாடும் வேளையில் சுதந்திரத்திற்கு பிறகான நமது சாதனைகளைக் கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வதுடன் புதிய இந்தியா, தற்சார்பு இந்தியா உறுதிப்பாட்டை நிறைவேற்ற நம்பிக்கையோடு முன்னேற வேண்டும்.

 

வளர்ச்சியின் பலன்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் புதிய இந்தியாவை நோக்கிப் பணியாற்றி, உறுதியான பாரதம், வலுவான பாரதம், தற்சார்பு பாரதம் மற்றும் உன்னத பாரதத்தை அடைவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்போம்.

நன்றி.

ஜெய் ஹிந்த்.

***************

(Release ID: 1831751)



(Release ID: 1831811) Visitor Counter : 172


Read this release in: Urdu , Punjabi , English , Hindi