வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கி அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது என்று திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்

Posted On: 06 JUN 2022 6:32PM by PIB Chennai

கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவாக உள்ள நிலையில்  5 ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்கி ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 கொச்சியில் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீன் பிடித்தலை அதிகரித்தல், தரம் மற்றும் வகைகளை உறுதி செய்தல் மற்றும் மீன்வளர்ச்சித் துறைக்கு தேவையான ஆதரவை வழங்குதல் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்று கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட், ஆஸ்திரேலியாவுடன் தடையில்லா ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து, கனடாவுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஜரோப்பிய யூனியனுடனான  தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்கள் வரும் 17ம் தேதி தொடங்கும் என்றும் திரு கோயல் குறிப்பிட்டார்.

மேலும்  விவரங்களுக்கு இந்த ஆங்கில குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831603

***************(Release ID: 1831639) Visitor Counter : 191