எஃகுத்துறை அமைச்சகம்

பன்னாவில் உள்ள தேசிய கனிமவள வளர்ச்சிக் கழகத்தின் வைர சுரங்கத்தில் மத்திய எஃகுத் துறை அமைச்சர் திரு ராமச்சந்திர பிரசாத் சிங் ஆய்வு செய்தார்

Posted On: 06 JUN 2022 3:40PM by PIB Chennai

பன்னாவில் உள்ள தேசிய கனிமவள வளர்ச்சிக் கழகத்தின் வைர சுரங்கத்தில் மத்திய எஃகுத் துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங்  ஆய்வு செய்தார். அப்போது வைர சுரங்கத்திட்டத்தின் நிலைக்குறித்து கேட்டறிந்தார். உச்சநீதிமன்ற ஒப்புதலுக்கு பிறகு விரைவாகவும் இயல்பான நடவடிக்கைகளை மீட்டெடுக்கவும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

அதிகாரிகளிடையே பேசிய எஃகுத் துறை அமைச்சர், சுற்றுச்சூழலும், வளர்ச்சியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.  இந்த நிலையை பராமரிப்பதற்கான  தேசிய கனிமவள வளர்ச்சி கழகத்தின் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரியது என தெரிவித்தார். கடந்த 2021-22ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.7 சதவிதமாக  இருந்தது என்றும் கூறினார். தேசிய கனிமவள வளர்ச்சிக்கழகம் போன்ற அமைப்புகள்  மூலமே இது சாத்தியமானது என்று  அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831536

 

(Release ID: 1831536)                ***************



(Release ID: 1831558) Visitor Counter : 117