அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உலகளாவிய காலநிலை இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்துகிறார்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 05 JUN 2022 6:47PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடி உலகளாவிய காலநிலை இயக்கத்தை வழிநடத்துவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு),புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.  காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவால் வழிநடத்தப்படுவதற்கு உலகம் தயாராக உள்ளது என்றும், இது கோவிட் தொற்றுநோயைப் போன்ற எல்லைகள் அற்ற சவாலைச் சந்தித்தது போல, இந்த தலைமைப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நம்மை ஆயத்தப்படுத்த வேண்டிய பொறுப்பு நமது அறிவியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்களின் தோள்களில் உள்ளது என்றும் அவர் கூறினார். . டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில்  விஞ்ஞானிகளிடம் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

 

 சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நவீன மற்றும் புதிய இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு நிறுவனத்தில் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது உலக சுற்றுச்சூழல் தினத்தில் மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு என்று அவர் கூறினார்.

கடந்த 8 ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்திற்கு எதிரான இந்திய அறப்போராட்டத்தை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் கூறினார். 2030 பாரிஸ் ஒப்பந்த இலக்கை விட, புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து 40% மின்சார உற்பத்தியை ஏற்கனவே அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி உலகளாவிய காலநிலை இயக்கத்தை வழிநடத்துகிறார், மற்ற உலகத் தலைவர்களும் இதைப் பின்பற்றியுள்ளனர் என்று டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார். 

அதை வெகுஜன இயக்கமாக மாற்ற விஞ்ஞான சமூகம் உழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். நம் மக்கள் வழக்கமாக வீணாக்கும் சமையல் எண்ணெய் கழிவில்  இருந்து லிட்டருக்கு 30 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்று டாக்டர் சிங் கூறினார்.

டாக்டர் ஜிதேந்திர சிங், நீண்ட காலத்திற்குப் பிறகு, அரசியல் தலைமையும் அறிவியல் சமூகமும் இணைந்து செயல்படுகின்றன என்றார். அரசாங்கம் தனது அனைத்து நடவடிக்கைகளிலும் விஞ்ஞான முன்னுரிமைகளால் வழிநடத்தப்படுகிறது. கல்வித்துறை மற்றும் தொழில் துறையினருடன் ஆராய்ச்சி சமூகம் ஒன்றிணைந்து, கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தங்கள் பங்குதாரர்களுடன் நெருக்கமாக பணியாற்றுமாறு விஞ்ஞானிகளுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு விடுத்தார். மத்திய அரசில் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டங்களை நடத்துவது வழக்கமாகிவிட்டது என்றார். அத்தகைய ஒத்துழைப்புக்கு அணு ஆற்றல் துறை ஒரு சிறந்த உதாரணம் என்று டாக்டர் சிங் கூறினார். இந்தியா இப்போது ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பின் மையமாக உள்ளது என்று மத்திய அமைச்சர் மேலும் கூறினார்.

உலகம் மும்மடங்கு சவாலை எதிர்கொள்கிறது என்பது தெளிவாகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்: பூமி எதிர்பார்த்ததை விட வேகமாக வெப்பமடைந்து வருகிறது, வாழ்விடத்தையும் உயிரினங்களின் பன்முகத்தன்மையையும் இழந்து வருகிறோம்;  மாசுபாடு குறையாமல் தொடர்கிறது. இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை நோக்கிய நிலையில், தூய்மையான எரிசக்தியை குறைந்த செலவில் உருவாக்குவதற்கு நாம் உழைக்க வேண்டும் என்று கூறி அமைச்சர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

***************



(Release ID: 1831365) Visitor Counter : 157


Read this release in: English , Urdu , Hindi , Punjabi