புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
கூரை மீது பொருத்தப்படும் சூரிய ஒளிசக்தி பற்றிய இந்திய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம்: கர்நாடகத்தில் மத்திய அமைச்சர் திரு பகவாந்த் கூபா துவக்கம்
प्रविष्टि तिथि:
05 JUN 2022 12:04PM by PIB Chennai
கூரை மீது பொருத்தப்படும் சூரிய ஒளிசக்தி பற்றிய இந்திய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தை கர்நாடகத்தின் பிடாரில் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணையமைச்சர் திரு பகவாந்த் கூபா நேற்று தொடங்கி வைத்தார். கர்நாடக அரசின் எரிசக்தி மற்றும் கன்னட கலாச்சார அமைச்சர் திரு வி. சுனில்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
துவக்க விழாவில் பேசிய அமைச்சர் திரு கூபா, மக்களின் பங்களிப்பு இல்லாமல் எத்தகைய பெரிய யோசனையும் வெற்றி பெறாது என்று கூறினார். உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்ற பிரச்சினையில் சாமானிய மக்களும் பங்குபெறும் வாய்ப்பை கூரை மீது பொருத்தப்படும் சூரிய ஒளிசக்தித் திட்டம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு மோடி நிர்ணயித்துள்ள பஞ்சாமிர்த இலக்குகளை சுட்டிக்காட்டிய அமைச்சர், 2030-ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதை படிவம் அல்லாத எரிசக்தித் திறனை அடைவதை நோக்கி அமைச்சகம் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். இதில் கூரை மீது பொருத்தப்படும் சூரிய ஒளிசக்தித் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், இந்த இலக்கை அடைவதற்கு இரண்டு மற்றும் மூன்றாம் தர நகரங்கள் அதிகபட்ச திறனை பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831257
***************
(रिलीज़ आईडी: 1831297)
आगंतुक पटल : 325