தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வனவிலங்குகள் குறித்த திரைப்படத்தை உருவாக்குவது தொழில் அல்ல, அர்ப்பணிப்பு: தேசிய விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்: சுப்பையா நல்லமுத்து
வனவிலங்கு திரைப்படங்களில் நடிக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு ஈடுபாடு இல்லை.
Posted On:
02 JUN 2022 6:36PM by PIB Chennai
வனவிலங்குகள் குறித்த திரைப்படங்களை (Wildlife film making) உருவாக்குவது மற்றும் தயாரிப்பது என்பது ஒரு தொழில் அல்ல, அது அனைவராலும் தொடர முடியாத ஒரு அர்ப்பணிப்பு என்று ஐந்து முறை தேசிய விருது பெற்ற வனவிலங்கு திரைப்படத் தயாரிப்பாளர் திரு. சுப்பையா நல்லமுத்து கூறினார்.
வனவிலங்கு திரைப்படம் தயாரிப்பதற்கு அனைவரையும் ஊக்கப்படுத்த மாட்டேன் என்றும் அவர் கூறினார். 17வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவையொட்டி நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சுப்பையா நல்லமுத்து பேசினார்.
வனவிலங்கு திரைப்படம் தயாரிப்பதில் உள்ள சவால்களை விவரித்த அவர், ஒரு சுவாரஸ்யமான கதையைப் பெற்று அதை சர்வதேச அளவில் கொண்டு செல்வதே கடினமான பகுதி எனத் தெரிவித்தார். குறிப்பாக படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறுதல், விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறுதல் மற்றும் படப்பிடிப்புக்குத் தேவையான உயர்தர தரமான உபகரணங்களை வாடகைக்கு எடுப்பது போன்ற சவால்கள் உள்ளன,'' என்றார். வனவிலங்கு திரைப்படத் தயாரிப்பிற்கு செய்யப்பட்ட செலவை திரும்பப் பெற முடிந்தாலும், அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் கூறினார். மேலும் வனவிலங்கு திரைப்படங்களில் நடிக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு முழு ஈடுபாடு இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830567
**********
(Release ID: 1830607)
Visitor Counter : 182