அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை தீர்மானிக்கும் என்றும் உலக பொருளாதாரத்தின் தூணாக திகழும் என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
02 JUN 2022 5:38PM by PIB Chennai
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை தீர்மானிக்கும் என்றும் உலக பொருளாதாரத்தின் தூணாக திகழும் என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
ஸ்டார்ட் அப் இந்தியா 2022 கண்காட்சி மற்றும் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் நடவடிக்கையின் மூலம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை எட்டு ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 300 லிருந்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். ஸ்டார்ட் அப் நிறுவன சூழலில் உலகில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக விளங்குகிறது என்று கூறினார். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஆராய்ச்சி, கல்வி மற்றும் தொழில் துறை நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தகவல் தொழில்நுட்பம்,கணினி, தகவல் தொடர்புத் துறைக்கும் அப்பால், மற்ற துறைகளிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று கூறினார். வேளாண் மற்றும் பால்வளத்துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்படலாம் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830529
***************
(Release ID: 1830597)
Visitor Counter : 199