எஃகுத்துறை அமைச்சகம்

தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் உற்பத்தியில் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

Posted On: 02 JUN 2022 10:16AM by PIB Chennai

இந்திய எஃகு அமைச்சகத்தின்கீழ் உள்ள சுரங்க நிறுவனமான தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. 2023-ம் நிதியாண்டில், 3.2 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டு, 2.65 மில்லியன் டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2021 மே மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 2.8 மில்லியன் டன்களை விட அதிகமாக, 2022 மே மாதத்தில், 14.3 சதவீதம் இரும்புத்தாது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2022 மே வரை, தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி 6.35 மில்லியன் டன்களாக இருந்தது. இந்தியாவின் மிகப்பெரிய கனிம தாது உற்பத்தியாளராக உள்ள தேசிய கனிம வளர்ச்சிக் கழகம், 2023-ம் நிதியாண்டில், 5.77 மில்லியன் டன்களை விற்பனை செய்துள்ளது.

இந்த செயல்திறனை எட்டியதற்காக, தேசின கனிம வளர்ச்சிக் கழகத்தின் தலைமை பொதுமேலாளர் திரு.சுமித் டெப், தனது குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். எங்கள் உற்பத்தியின் நிலையான வளர்ச்சி, தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இரும்புத்தாது சுரங்க நிறுவனமாக மாற்றியது மட்டுமின்றி, உள்நாட்டு எஃகு துறைக்கு நிலையான விநியோகஸ்தராகவும் மாற்றியுள்ளது. புதிய தொழில்நுட்பம், டிஜிட்டல் பயன்பாடுகளை வரவேற்பதன் மூலம் எங்கள் நிறுவனத்தை வலுப்படுத்தியுள்ளோம்.

***************



(Release ID: 1830463) Visitor Counter : 142