ஜவுளித்துறை அமைச்சகம்
2021-22 நிதியாண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி மிக உயர்ந்த அளவாக 44 பில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAY 2022 6:07PM by PIB Chennai
2021-22 நிதியாண்டில் கைவினைப் பொருட்கள் உட்பட இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மிக உயர்ந்த அளவாக 44 பில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்துள்ளது. ஏற்றுமதி செய்ததில் 27 சதவீத பங்களிப்புடன் அமெரிக்கா முதலிடத்திலும், 18 சதவீதத்துடன் ஐரோப்பிய ஒன்றியமும், 12 சதவீதத்துடன் பங்களாதேஷூம் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளன.
பருத்தி ஆடைகள் ஏற்றுமதி 17.2 பில்லியன் அமெரிக்க டாலராகவும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 16 பில்லியன் அமெரிக்க டாலராகவும் மனிதர்களால் தயாரிக்கப்பட்ட ஜவுளிகள் ஏற்றுமதி 6.3 பில்லியன் அமெரிக்க டாலராகவும், கைவினைப்பொருட்கள் ஏற்றுமதி 2.1 பில்லியன் அமெரிக்க டாலராகவும் இருந்தன.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1829882)
வருகையாளர் எண்ணிக்கை : 272