பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பதஞ்சலி நிறுவனத்துடன் கூட்டாக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அந்த நிறுவனத்தின் குழுவினருடன் திரு அர்ஜூன் முண்டா ஆய்வு

Posted On: 27 MAY 2022 4:43PM by PIB Chennai

பழங்குடியினர் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக, பழங்குடியினர் நல அமைச்சகம், பதஞ்சலி நிறுவனத்துடன் கூட்டாக மேற்கொண்டுவரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் பதஞ்சலி யோக பீட இணைநிறுவனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா தலைமையிலான குழுவினருடன் ஆய்வு செய்தார்.

மத்திய இணையமைச்சர்கள் திரு பிஷேஸ்வர் டுடு, முன்னாள் இணையமைச்சர் திரு பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் உயர் அதிகாரிகள் இந்த உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 இந்த அமைச்சகத்தின் உயர் சிறப்பு மையங்கள் கூட்டத்திற்கு ஒத்துழைக்கும் விதமாக நிதியுதவி அளிக்கும் திட்டத்தை பதஞ்சலி நிறுவனம், பழங்குடியினர் நல அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

 இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, நாடு முழுவதும் உள்ள பழங்குடியின ஆராய்ச்சி  மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை, பழங்குடியினர் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றார். பழங்குடியின ஆராய்ச்சி மையங்கள், பழங்குடியினர் பற்றிய படிப்புகளை தங்களது பாடத்திட்டங்களில் சேர்ப்பதன் மூலம், பழங்குடியின சமுதாயம், கலாச்சாரம், அறிவாற்றல், பாரம்பரியம் பற்றிய அறிவை விரிவுபடுத்த முடியும் என்றார். மருத்துவ தாவரங்களை வளர்த்து, மூலிகை  மருந்துகளை தயாரிப்பதன் மூலம், மூலிகை தாவரங்கள் அதிகளவில் விளையும் பகுதிகளில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் என்றும் திரு அர்ஜூன் முண்டா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1828767

................



(Release ID: 1828784) Visitor Counter : 115