இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகின் முதல்நிலை பேட்மிண்டன் வீரர் விக்டர் அக்சல்சன்னுடன் துபாயி்ல் பயிற்சி பெறவேண்டும் என்ற லக்சயாசென்னின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 26 MAY 2022 5:35PM by PIB Chennai

உலகின் முதல் நிலை பேட்மிண்டன் வீரர் விக்டர் அக்சல்சன்னுடன் துபாயில் பயிற்சி பெறவேண்டும் என்ற இந்திய வீரர் லக்சயாசென்னின் கோரிக்கைக்கு ஒலிம்பிக் பிரிவு இயக்க கமிட்டி உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

இந்த மாதம் நடைபெற்ற  தாமஸ் கோப்பை போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற லக்சயா சென்,  மே மாதம் 29ம் தேதி முதல் ஜூன் மாதம் 5ம் தேதி வரை துபாயில் நடைபெறவுள்ள பயிற்சியில் விக்டர் அக்சல்சன்னுடன்  பயிற்சி பெற திட்டமிட்டுள்ளார். பின்னர், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஜூன் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறவுள்ள பயிற்சியிலும் பங்கேற்க லக்சயாசென் முடிவு செய்துள்ளார்.

இந்த இரண்டு கோரிக்கைகளையும், ஒலிம்பிக் பிரிவு இயக்கம் ஏற்றுக் கொண்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1828526

------


(रिलीज़ आईडी: 1828555) आगंतुक पटल : 163
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi