தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில-இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் – ஏப்ரல், 2022 அதிக புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம்

Posted On: 21 MAY 2022 11:29AM by PIB Chennai

ஏப்ரல், 2022 மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில -இந்திய  நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (அடிப்படை : 1986/87 =100) 10 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 1,108 (ஆயிரத்து நூற்றி எட்டு) மற்றும் 1,119 (ஆயிரத்து நூற்று பத்தொண்பது) புள்ளிகளாக உள்ளதுஅரிசி, கோதுமை-ஆட்டா, சோளம், கம்பு, கேழ்வரகு, காய்கறி & பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வே, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான பொதுக் குறியீடு உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது

இந்த குறியீடு உயர்வு / வீழ்ச்சி, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை,  19 மாநிலங்களில் 1புள்ளி முதல் 20 புள்ளிகள் வரை உயர்ந்துள்ள வேளையில்தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 7 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளதுநுகர்வோர் விலைக் குறியீட்டுப் பட்டியலில் 1,275 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது, அதேவேளையில் ஹிமாச்சலப்பிரதேசம் 880 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.  

கிராமப்புறத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, 19 மாநிலங்களில் 2 முதல் 19 புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 7 புள்ளிகள் குறைந்துள்ளதுஇந்தக் குறியீட்டில், 1263 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், 931 புள்ளிகளுடன் ஹிமாச்சலபிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.  

தமிழ்நாட்டில் அரிசி, மீன், வெங்காயம், காய்கறி & பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததே, இந்த சாதனைக்குக் காரணமாகும்

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1827144

•••••••••••••

 


(Release ID: 1827168) Visitor Counter : 222