புவி அறிவியல் அமைச்சகம்

சிஎஸ்ஐஆர்- என்பிஎல் எடை அளவியல் தினத்தை இன்று கொண்டாடியது

Posted On: 20 MAY 2022 5:34PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர்- என்பிஎல், இந்திய எடை அளவியல் சங்கத்துடன் இணைந்து உலக எடை அளவியல்  தினத்தை  இன்று (மே 20, 2022) கொண்டாடியது.  1875 ஆம் ஆண்டு எடை அளவியல்  குறித்த ஒப்பந்தத்தில் இதே நாளில் கையெழுத்திட்டதை நினைவுகூரும் வகையில், இன்று உலக எடை அளவியல்  தினம் கொண்டாடப்படுகிறது. “டிஜிட்டல் யுகத்தில் எடை அளவியல்” என்பது இந்த ஆண்டின் மையப்பொருளாகும். எடைகள் மற்றும் அளவைகளின் சர்வதேச அமைப்பும் சட்டரீதியான எடை அளவியலுக்கான சர்வதேச அமைப்பும் இந்த மையப்பொருளை அறிவித்தன.

இன்றைய நிகழ்வை சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் இயக்குனர் டாக்டர் டி கே ஆஸ்வால் தொடங்கிவைத்தார். இந்தியாவில் எடை அளவியலில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் தரநிர்ணய கட்டமைப்பில் அதன் தாக்கும் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உலக எடை அளவியல் தின சுவரொட்டி வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதலாவது ரோபோ முறையிலான ஒப்பிட்டு எடை கருவியும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

******



(Release ID: 1827045) Visitor Counter : 167


Read this release in: English , Urdu , Hindi , Marathi