தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 மார்ச் மாதத்தில் இபிஎஃப்ஓ-வில் 15.32 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்


மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா மற்றும் தில்லி ஆகியவை தோராயமாக 10.14 லட்சம் சந்தாதாரர்களுடன் (66.18%) முன்னணியில் உள்ளன

Posted On: 20 MAY 2022 5:24PM by PIB Chennai

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள தற்காலிக தரவின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 15.32 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில், 2.47 லட்சம் சந்தாதாரர்கள் அதிகம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக சேர்ந்த 15.32 லட்சம் சந்தாதாரர்களின் 9.68 லட்சம் பேர் புதிய உறுப்பினர்கள். இவர்கள் முதல் முறையாக இபிஎஃப்ஓ-வில் சேர்ந்துள்ளனர். இது முந்தைய மாதத்தை காட்டிலும் 81,327 அதிகமாகும். சுமார் 5.64 லட்சம் சந்தாதாரர்கள், அமைப்பில் இருந்து வெளியேறி மீண்டும் சேர்ந்துள்ளனர். இவர்கள் முந்தைய கணக்கில், தற்போதைய பிஎஃப் கணக்கை இணைத்துள்ளனர்.  

22 வயது முதல் 25 வயது வரையிலானவர்கள் மார்ச் மாதத்தில் 4.11 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இதையடுத்து 29-35 வயது வரம்பில் 3.17 லட்சமும், 18-21 வயது வரம்பில் மார்ச் மாதத்தில் 2.93 லட்சமும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆகும்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா மற்றும் தில்லி ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கின்றன. இந்த மாநிலங்களில் மட்டும்  தோராயமாக 10.14 லட்சம் சந்தாதாரர்கள் மார்ச் மாதத்தில் இணைந்துள்ளனர். இது  (66.18%) ஆகும்.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826969

***************


(Release ID: 1827034) Visitor Counter : 237


Read this release in: English , Gujarati , Urdu , Hindi