இந்திய போட்டிகள் ஆணையம்
எஸ்எம்டபிள்யூ இஸ்பாட் பிரைவேட் லிமிடெட் பங்குகளை ஓஎஃப்பி டெக் லிமிடெட் வாங்க சிசிஐ ஒப்புதல்
Posted On:
19 MAY 2022 11:56AM by PIB Chennai
எஸ்எம்டபிள்யூ இஸ்பாட் பிரைவேட் லிமிடெட்டின் பெரும்பான்மையான பங்குகளை ஓஎஃப்பி டெக் லிமிடெட் வாங்குவதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையமான சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
எஸ்எம்டபிள்யூ இஸ்பாட் பிரைவேட் லிமிடெட், எஃகு பாலங்கள், எஃகு கட்டிகள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது.
வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமான ஓஎஃப்பி டெக் லிமிடெட், எஃகு, இரும்பு அல்லாத உலோகம், ரசாயனம், பெட்ரோலியப் பொருட்கள், வேளாண் பொருட்கள் ஆகியவற்றின் மூலப்பொருட்களை ஆன்லைன் மற்றும் நேரடியாக மொத்த விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், எஸ்எம்டபிள்யூ இஸ்பாட் பிரைவேட் லிமிடெட்டின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கு ஓஎஃப்பி டெக் லிமிடெட் விருப்பம் தெரிவித்திருந்தது. இதற்காக முன்மொழியப்பட்ட இதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையமான சிசிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது.
***************
(Release ID: 1826666)
Visitor Counter : 130