திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் துறையின் திறன் கவுன்சில் திறன் மேம்பாடு மற்றும் திறன் கட்டமைப்புக்காக தேசிய திறன் மேம்பாட்டு நிதியத்திற்கு பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியாக ரூ.51 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 18 MAY 2022 2:32PM by PIB Chennai

இந்தியாவின் இளைஞர்களை திறன் பயிற்சியுடன் அதிகாரப்படுத்தலுக்காக ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் துறையின் திறன் கவுன்சில் திறன் மேம்பாடு மற்றும் திறன் கட்டமைப்புக்காக தேசிய திறன் மேம்பாட்டு நிதியத்திற்கு பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியாக ரூ.51 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதற்கான காசோலையை இந்த நிறுவனத்தின் தலைவர் திரு ப்ரேமல் உதானி திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சக செயலாளர் திரு ராஜேஷ் அகர்வாலிடம் வழங்கினார். இந்த நிதி திறன் கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படும்.

இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட 2013 டிசம்பருக்குப்பின் 45 தகுதி திட்டங்களில் ஆயத்த ஆடை துறையில் சுமார் 12 லட்சம் பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826309

***************


(रिलीज़ आईडी: 1826432) आगंतुक पटल : 317
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी