குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நலிந்த பிரிவு மக்களுக்கு கல்வியைக் கொண்டு செல்லும் தேச முயற்சியில் இணையுமாறு மாணவர்களைக் குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்

Posted On: 18 MAY 2022 2:59PM by PIB Chennai

சமூகத்தில் நலிந்த பிரிவு மக்களுக்கும் தேவைப்படும் பிரிவினருக்கும் கல்வியைக் கொண்டு செல்லும் தேசத்தின் முயற்சியில் இணையுமாறு மாணவர்களைக் குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார் நீலகிரியின் லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றிய அவர் நாட்டின் கல்வி வரைப்படத்தை மாற்றவும் கூடுதல் சமத்துவம் உள்ளதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கும்  அரசு அனைத்து முயற்சிகளையும் செய்வதை சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் மக்கள் தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் 35 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் என்பது நமக்கு சாதகமானது என்று அவர் குறிப்பிட்டார். இவர்களின் முழு ஆற்றலையும் திறனையும் படைப்பாக்க சக்தியையும் பயன்படுத்துவதன் மூலம் உலக அரங்கில் பலம் வாய்ந்த நாடுகளில் முன்னணியில் இருப்பதாக இந்தியாவை உருவாக்க முடியும் என்று திரு நாயுடு கூறினார்.

இந்தியா முழுவதும் ஊரகப்பகுதிகளிலும், நகர் பகுதிகளிலும் உள்ள பள்ளிகள்,கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் தேசிய கல்விக்கொள்கை உணர்வு பூர்வமாக செயல்படுத்தப்படும்போது, நமது நாட்டின் கல்வித்துறை புரட்சிகரமானதாக மாறும் என்று குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார். உலக நாடுகளி்ல்  விஸ்வகுரு என்ற நிலையை இந்தியா மீண்டும் பெறுவதை உறுதி செய்ய நாம் அனைவரும் கூட்டாக பாடுபடவேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826327 .

***************



(Release ID: 1826380) Visitor Counter : 148